நல்லாட்சி அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் அமைச்சு, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு ஆகிய அமைச்சுக்கள் புதிய அமைச்சரவையில் காணாமலாக்கப்பட்டுள்ளன. கல்வி மறுசீரமைப்பு பரீட்சைகள் மற்றும் பல்கலைக்கழக தொலைநோக்கு கல்வி என்ற இராஜாங்க அமைச்சுக்கு வர்த்தமானி வெளியிடப்பட்டும் அந்த இராஜாங்க அமைச்சு பதவி எவருக்கும் இதுவரையில் வழங்கப்படவில்லை
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைஇன்று தலதா மாளிகை வளாகத்தில் பொறுப்பேற்றது. புதிய அமைச்சரவையில் புதிதாக இராஜாங்க அமைச்சுக்கள் பல அறிமுகம்செய்யப்பட்டுள்ளன. இருப்பினும் நல்லாட்சி அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட அமைச்சுக்கள் பல காணாமலாக்கப்பட்டுள்ளன.
நல்லாடச்சி அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி, தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு ஆகிய அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சுக்கள் புதிய அரசாங்கத்தில் இல்லாமலாக்கப்பட்டுள்ளன.
மலையக அபிவிருத்திக்கென நல்லாட்சி அரசாங்கத்தில் பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட மலைநாட்டு புதிய கிராமங்கள் தொடர்பான அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சில் உள்ளடக்கப்ட்ட விடயதானங்கள். புதிய அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சிற்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள் எந்த இராஜாங்க அமைச்சுக்குள்ளும் உள்ளடக்கப்படவில்லை. தேசிய நல்லிணக்கம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்பார்ப்புக்குள்ளாக்கப்பட்டுள்ளன.
Akurana Today All Tamil News in One Place