ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவியிலிருந்து ரணில் விக்ரமசிங்க விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.
இந்நிலையில் அக்கட்சியின் தலைமைப் பதவிக்கு தயா கமகே, அகில விராஜ் காரியவசம், ரவி கருணாநாயக்க மற்றும் வஜிர அபேவர்தன ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10 மணிக்கு ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையகமான ஸ்ரீ கொத்தாவில் இடம்பெற்ற கட்சி முக்கியஸ்தர்களின் கூட்டத்தில் இந்த தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் பொது செயலாளர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை ஐக்கிய தேசிய கட்சிக்குரிய தேசிய பட்டியல் ஆசனத்திற்கு அக்கட்சியின் முக்கியஸ்தர்களுக்கிடையில் போட்டி நிலவுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place