நிபுணர்கள் அரசிடம் கோரிக்கை
அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை 2 ஆம் திகதிவரை நீடிக்குமாறு சுகாதாரத்துறையின் உயர்மட்ட நிபுணர்கள் அரசிடம் பரிந்துரை செய்துள்ளனர். தற்போதுள்ள பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நீடித்து அரசு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.மேற் குறிப்பிட்ட பரிந்துரையை அரசும் தீவிர பரிசீலனையில் எடுத்திருக்கிறது.
முன்னதாக இன்று (14) காலை 4 மணிக்கு பயணத்தடை தளர்த்தப்படுமென இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்திருந்தார்.
ஆனால் மருத்துவத்துறை நிபுணர்களின் கடும் ஆட்சேபனைகளையடுத்து அந்த அறிவிப்பு வாபஸ் பெற்று எதிர்வரும் 21 ஆம் திகதிவரை பயணக்கட்டுப்பாட்டை நீடிக்க அரசு முடிவு செய்தது.
இந்நிலையில் ஜூன் இறுதி வாரத்தில் பொசோன் நிகழ்வும் வரவிருப்பதால் மக்களின் நடமாட்டம் அதிகரிக்கலாம் என்று கருதும் மருத்துவத்துறை நிபுணர்கள் , பயணக்கட்டுப்பாட்டை ஜூலை 2 ஆம் திகதி வரை நீடிப்பதே நல்லதென அரசிடம் பரிந்துரைத்துள்ளனர். – தினகரன்-
Akurana Today All Tamil News in One Place