விக்டோரியாவின் டெல்டா கொவிட் -19 மாறுபாடு கடந்த மாத தொடக்கத்தில் இலங்கையிலிருந்து திரும்பி வந்து, ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்குள் நுழைந்த பயணியிடையே கண்டறியப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய தெரிவித்துள்ளனர்.
மே 8 அன்று இலங்கையிலிருந்து வந்து ஹோட்டல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட ஒரு நபருடன் மேற்கு மெல்போர்ன் கிளஸ்டரை (கொத்தணி) அதிகாரிகள் மரபணு ரீதியாக இணைத்துள்ளதாக அவுஸ்திரேலிய பதில் பிரதமர் ஜேம்ஸ் மெர்லினோ அறிவித்துள்ளார்.
40 வயதுடைய நபர் க்ளென் ஈரா நகரில் வசிப்பவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
குறித்த நபர் மே 23 அன்று வெளியேற்றப்படுவதற்கு முன்னர் Novotel Ibis இல் இருந்து மே அன்று பிறிதொரு ஹோட்டலுக்கு மாற்றப்பட்டார்.
கொவிட்-19 இன் டெல்டா மாறுபாடு மேற்கு மெல்போர்ன் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு உறுப்பினர்களில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந் நிலையில் இலங்கையிலிருந்து திரும்பி வந்த பயணிகளிடமிருந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வைரஸ் எவ்வாறு பரவியது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
கடந்த ஆண்டு விக்டோரியாவின் இரண்டாவது கொவிட்-19 அலை தொற்றுகளில் 99 சதவீதத்திற்கும் அதிகமானவை ஹோட்டல்களில் கண்டுபிடிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. -வீரகேசரி பத்திரிகை-
Akurana Today All Tamil News in One Place