4 நாட்களில் கொரோனாவால் இறந்தவர்களின் 46 உடல்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம் ! 

கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் பணிகள் ஓட்டமாவடி – மஜ்மா நகர் பகுதியில் இடம்பெற்று வருகின்றன.

குறித்த இடத்தில் நேற்று (20) வியாழக்கிழமை மாத்திரம் 8 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளதாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்தார்.

அந்தவகையில்,கடந்த திங்கள் முதல் நேற்று வியாழன் வரையான நான்கு நாட்களில் 46 உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

இதில், முஸ்லிம், கிறிஸ்தவ, இந்து, சிங்கள ஆகிய இனங்களைச் சேர்ந்தோரின் உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன.

நேற்று (20) ஆம் திகதி வியாழக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்ட 8 உடல்களுடன் மொத்த நல்லடக்கம் 202 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. -வீரகேசரி பத்திரிகை-

Check Also

10 தேர்தல்களை நடத்த அரசிடம் பணம் உண்டு

உள்ளூராட்சித் தேர்தலை ஒத்திவைக்க 21 தடவை சதி முயற்சி – தற்போது புதிய முயற்சி என்று கூறுகிறார் சம்பிக்க எம்.பி. …

Free Visitor Counters Flag Counter