சகல பள்ளிவாயல் நம்பிக்கையாளர்களுக்கும் / பொறுப்பாளர்களுக்கும்.
பள்ளிவாயல்களில் நோன்புப் பெருநாள் தொழுகை நடாத்த முடியாது.
வேகமாக பரவும் கொவிட்-19 தொற்று நோய் மற்றும் வணக்கஸ்தளங்களில் கூட்டுச் செயற்பாடுகளை தவிர்க்குமாறு கூறும் சுகாதார வழிகாட்டல்களையும் கருத்திற் கொண்டு எதிர் வரும் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகைகைளை எந்தவொரு பள்ளிகளிலும் நடாத்தக் கூடாது என இலங்கை வக்பு சபை தீர்மானித்துள்ளது.
ஈதுல் பித்ர் தினத்தில் சகல பள்ளிவாசல்களும் மூடப்பட்டிருத்தல் வேண்டும்.
வீட்டில் குடும்பத்தோடு பெருநாள் தொழுகையை தொழுமாறும் வெளியில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் முஸ்லிம்கள் அனைவரும் வேண்டப்படுகிறார்கள்.
இலங்கை வக்பு சபையின் பணிப்புரைக்கமைய இது வெளியிடப்படுகின்றது.
ஏ.பி.எம்.அஷ்ரப்
பணிப்பாளர், முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகள் (வக்பு சபை) முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்.
Akurana Today All Tamil News in One Place