ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த 7 தேசியப் பட்டியல்களில், ஒரேயொரு தமிழ் பேசும் உறுப்பினர் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியுடன், கூட்டணி அமைத்த றிசாத், ஹக்கீம் மனோ, ஆசாத் சாலி ஆகியோர் தமக்கும் தேசியப் பட்டியல் கிடைக்குமென நம்பியிருந்தனர்.
எனினும் ஐக்கிய மக்கள் சக்தி நியமித்த, தேசியப் பட்டியலுக்கான உறுப்பினர்களில் கூட்டணி கட்சிகளுக்கு இடம் வழங்கப்படவில்லை.
இதுகுறித்த விமர்சனங்கள், சமூக ஊடகங்களில் வலம் வருகின்றன.
அதாவது, ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 க்கு மேல் தேசியப் பட்டியல் ஆசனங்கள் கிடைத்தால்தான், அவை ஏனைய கட்சிகளுக்கு பகிரப்படுமென சஜித் பிரேமதாசா முன்னமே தரட்டவட்டமாக குறிப்பிட்டிருந்ததாகவும், அதனடிப்படையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு 7 ஆசனங்களே கிடைத்ததாகவும், எனவே அந்த 7 தேசியப் பட்டியல்களையும் தமது கட்சிக்குள்ளே அவர் பகிர்ந்தளித்ததாகவும் கூறப்படுகிறது.
Akurana Today All Tamil News in One Place