உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பாக முன்னெடுக்கப்படுகின்ற விசாரணைகளின் அடிப்படையில் பலர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில்,
கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வும் விரைவில் கைதாகுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக தெரியவருகின்றது.
பயங்கரவாதிகள் நிதியை திரட்டிக்கொள்வதற்கு உதவிய குற்றச்சாட்டில் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவருடைய சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் குற்றப்புலனாய்வுத்துறையினரால் பயங்கரவாத தடைச்சட்டத்தின்கீழ் கைது
செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பயங்கரவாத தடை சட்டத்தின்கீழ் தொடர்பில்லாவிட்டாலும் நிதிச்சலவைக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக உறுதிபடுத்தப்பட்ட தகவல்கள் தெரிவித்தன.
Akurana Today All Tamil News in One Place