எதிர்வரும் மே மாதமளவில் சமையல் எரிவாயுவின் விலை 195 ரூபா முதல் 200 ரூபா வரையில் வரையில் அதிகரிக்ககூடும் என அரச வட்டார தகவல் தெரிவித்துள்ளன.
12.5 கிலோ கிராம் எடையுடைய லிட்ரோ நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 700 ரூபாவிலும் லாப் நிறுவனத்தின் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 655 ரூபாவாலும் அதிகரிப்பதற்கு நுகர்வோர் அதிகார சபையிடம் அனுமதி கேட்டுக்கொண்டுள்ளதாக அந்நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதுடன் ஐக்கிய அமெரிக்க டொலர் ஒன்றுக்கான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதனால் தமது நிறுவனங்களுக்கு பாரிய நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
ஆகவே, தற்போது காணப்படும் விலையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களை தொடர்ந்தும் விற்பனை செய்வதற்கு முடியாதென அந்நிறுவனங்கள் அரசாங்கத்திடம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகார சபையின் உயர் அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளதாவது, ‘சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பதற்கு நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளபோதிலும் அது தொடர்பில் இதுவரை இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை’ என தெரிவித்துள்ளார்.
-வீரகேசரி பத்திரிகை- (எம்.எம்.சில்வெஸ்டர்)
Akurana Today All Tamil News in One Place