11 அமைப்புகளை சேர்ந்தோர் பள்ளி நிர்வாகத்திலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் – வக்பு சபை தீர்மானம் நிறைவேற்றம்
அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டுள்ளதாகத் தெரிவித்து அரசாங்கம் விசேடவர்த்தமானி அறிவித்தல் மூலம் தடை செய்துள்ள 11 இஸ்லாமிய அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் பள்ளிவாசல்களின் பரிபாலன சபைகளில் அங்கம் வகிக்க முடியாது.
பதவி வகிக்க முடியாது. அவர்கள் உடனடியாக தங்கள் பதவிகளை இராஜினாமா செய்தல் வேண்டும் என வக்பு சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
நேற்று இடம்பெற்ற வக்பு சபையின் அமர்விலேயே இத்தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. இத்தீர்மானம் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கும் அறிவிக்கப்படவுள்ளது.
குறிப்பிடப்பட்டவர்கள் எழுத்து மூலம் தங்களது இராஜினாமாவை வக்பு சபைக்கு அறிவிக்கும்படி கோரப்பட்டுள்ளதுடன்,
வெற்றிடங்களுக்கு விஷேட நம்பிக்கை பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரப் தெரிவித்தார். (ஏ. ஆர்.ஏ.பரீல்)
Akurana Today All Tamil News in One Place