இம்முறை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மூன்று தந்தை – மகன் ஜோடிகள் நாடாளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ளனர்.
முதலாவது ஜோடியாக முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் தெரிவாகியுள்ளனர்.
அத்துடன் முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அவரது மகன் ஷஷிந்திர ராஜபக்ஷ ஆகியோரும், முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மற்றும் அவரது மகன் பிரமித பண்டார தென்னகோன் ஆகியோரே தெரிவாகியுள்ளனர்.
கடந்த நாடாளுமன்றத்தில் ராஜித சேனாரத்ன மற்றும் அவரது மகன் சத்துர சேனாரத்ன ஆகிய இருவரும் தெரிவு செய்யப்பட்டனர்.
எனினும் சத்துர சேனாரத்ன இம்முறை நாடாளுமன்றத்திற்கு தெரிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Akurana Today All Tamil News in One Place


