இத்தாலியில் இருந்து இலங்கைக்கு திரும்பிய நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையத்துக்கு செல்லாமல் மறைந்திருப்பவர்கள் உரிய ஆவணங்கள் இன்றி சட்டவிரோதமாக இத்தாலிக்கு சென்றவர்களாவர் என இராணுவத்தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவர்களை காவல்துறை நிலையங்களில் பதிவுசெய்யுமாறும் தனிமைப்படுத்தல் கண்காணிப்பு நிலையங்களுக்கு செல்லுமாறும் அதிகாரிகள் கோரியுள்ளனர்.
இதன்போது அவர்களுக்கு எதிராக மனிதாபிமான அடிப்படையில் எவ்வித சட்டநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாது என்றும் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்
எனவே இத்தாலியில் இருந்து திரும்பியவர்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் தென்படுமானால் உடனடியாக தம்மை பதிவு செய்துக்கொள்ளவேண்டும்.
இல்லையேல் அவர்கள் கடும் நடவடிக்கைகளுக்கு உள்ளாகவேண்டியிருக்கும் என்றும் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்
இதேவேளை இவ்வாறு மறைந்துள்ளவர்களை தேடி காவல்துறை ஊரடங்கின்போது புத்தளம், சிலாபம், மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
Akurana Today All Tamil News in One Place