வெளிநாடுகளில் வாழ்கின்ற இலங்கையர்களுக்குக் கூட உபயோகிப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் அங்கீகரிக்காததும், அதேவேளை உலக சுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகரிக்கப்படாத ஒரு தடுப்பூசியை எமது நாட்டிலுள்ள பிரஜைகளுக்கு வழங்குவதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது ஒழுங்கற்ற செயற்பாடாகும் என்று இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் அனுமதியின்றி எந்தவொரு கொவிட் தடுப்பூசியையும் நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டாம் எனவும் அந்த சங்கம் சுகாதார அமைச்சை வலியுறுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சிக்கு இலங்கை மருத்துவ சங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. -வீரகேசரி பத்திரிகை- (எம்.மனோசித்ரா)
Akurana Today All Tamil News in One Place