தனிமைப்படுத்தப்பட வேண்டிய வெளிநாட்டவர் பொதுமக்கள் மற்றும் ஊடகங்களின் உதவியுடன் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
ஐரோப்பிய நாடு ஒன்றில் இருந்து வருகை தந்து கொழும்பு பிரதேசத்தில் தங்கியிருந்து வெளியேறும் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டியிருந்த வெளிநாட்டவர் தொடர்பில் ஊடகங்கள் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இன்றைய தினம் பொது மக்களின் ஒத்துழைப்புடன் இந்த நபரை கண்டுபிடிக்க முடிந்துள்ளது என்று பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிசாரின் பொறுப்பின் கீழ் இவரை தனிமைப்படுத்தலுக்கு தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நபர் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர் ஒருவருடன் கொழும்பு 7 உணவகம் ஒன்றில் ஒன்றாக இருந்த பிரான்ஸ் நாட்டவர் ஆவார்.
Akurana Today All Tamil News in One Place