புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, புத்தளம் மாவட்டத்திற்குரிய கருவலகஸ்வெவ, வனாதவில்லுவ, நவகத்தேகம, முந்தளம், உடப்புவ, சாலியவெவ மற்றும் நுரைச்சோலை அகிய பிரதேசங்களுக்கு இன்று (18) பிற்பகல் 4.30 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று பரவலை தடுப்பதற்காக புத்தளம் மாவட்டம் மற்றும் நீர்க்கொழும்பு, கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கு இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்பட்டுள்ளது.
நீர்க்கொழும்பு பிரிவின் கொச்சிக்கடை பொலிஸ் அதிகாரத்திற்குட்பட்ட பிரதேசத்திற்கும் இந்த ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் கொரோனா சம்பந்தமான அனைத்து செய்திகளையும் ஒரே பார்வையில்
Akurana Today All Tamil News in One Place