இலங்கை: இஸ்லாத்தின் அரசியல்

தீவிரவாதி அஹமட் சம்சுதீன் நியூசிலாந்தில் வாழ்ந்தபோது அடிப்படைவாதத்துக்கு உட்படுத்தப்பட்டதாக ஆரம்ப அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், அவரது நடவடிக்கைகள் மற்றும் அகதி அந்தஸ்துக்காக அவர் தெரிவித்திருந்தவற்றை சுற்றியுள்ள சூழ்நிலைகள் மிகவும் துன்பகரமானதும் மற்றும் விரும்பத்தகாத வழிகளில் இலங்கை முஸ்லிம் சமூகம் தொடர்பாக எமது தேசியமட்டத்தில் கவனத்தை ஈர்க்கிறது.

இலங்கையில் உள்ள அவரது சமூகத்திலும் அவைa தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. ஏனெனில் முஸ்லிம் எதிர்ப்பு செயற்பாட்டாளர்கள் அவரது கதையைப் பயன்படுத்தி சமூகங்களுக்கு இடையேயான பதற்றத்தை மேலும் அதிகரிக்க முயல்கின்றனர்.

ஆனால் இந்த சமூகம்பற்றி சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை, என்பதுடன் பரந்தளவில் இலங்கைத் தமிழ் மக்களுடன் சர்வதேசரீதியாக அடிக்கடி ஒன்றாக இணைக்கப்படுகின்றனர்.

இலங்கை முஸ்லிம்கள் பெரும்பாலும் தமிழைத் தங்கள் முதல் மொழியாகப் பேசினாலும், அவர்கள் முதன்மையாக இந்து தமிழர்கள் மற்றும் பெரும்பான்மை சிங்கள மக்களிடமிருந்து (முதன்மையாக பௌத்தர்கள்) வேறுபட்ட அடையாளக் குழுவாகக் கருதப்படுகிறார்கள். இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான அடையாளம் மற்றும் வரலாறு சம்சுதீனின் வன்முறைச் செயல்களுக்கும், அகதி அந்தஸ்தாய் பெறுவதற்கு அவர் தெரிவித்திருந்தவற்றுக்கும் முக்கியமான சூழலை வழங்குகிறது.

இலங்கை முஸ்லிம்கள் குறைந்த பட்சம் ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து தங்கள் பவுத்த, இந்து மற்றும் பிற்கால கிறிஸ்தவ அயலவர்களுடன் ஒன்றாக வாழ்ந்துவருபவர்கள்

காலனித்துவத்திற்கு முன்னரான சமூகங்களில் அவர்கள் வணிகர்கள், அமைச்சர்கள், அறிஞர்கள், நிர்வாகிகள் மற்றும் சமூகத் தலைவர்களாக விளங்கியவர்கள். அவர்களின் தனித்தன்மை மற்றும் அவர்கள் செயற்படும் பிராந்தியம் கடந்த கட்டமைப்புகளுக்கு மதிப்பளிக்கப்பட்டது

ஆனால் இலங்கை முஸ்லிம்களின் தனித்துவமானதொரு அடையாளம் வரலாற்று ரீதியாக தவிர்க்க முடியாதது அல்ல.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் முஸ்லிம் தலைவர்கள் தமிழர்களுடன் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டுமா என்பது தொடர்பாக விவாதித்தனர்.எவ்வாறெனினும் நோக்கத்துடன் முஸ்லிம் அல்லாத தமிழர்களிடமிருந்து விலகியிருந்து தங்கள் தனித்துவத்தை பராமரித்தனர், மேலும் சில முக்கிய பிரச்சினைகளில் சிங்கள பெரும்பான்மையினருடன் தங்களை இணைத்துக் கொண்டனர்.

எவ்வாறாயினும் 20ம் நூற்றாண்டு முழுவதும், தமிழர்களும் முஸ்லிம்களும் அதிகரித்த அளவில் சிங்கள பவுத்த அரசிற்குள் அதிகளவுக்கு சகிப்புணர்வு கொண்ட சிறுபான்மையினராக விளங்கினர்.

இலங்கையின் அரசியலமைப்பில் பௌத்தத்திற்கு ‘முதன்மையான இடம்’ கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் தமிழ் மற்றும் முஸ்லிம் சிறுபான்மையினர் ஒரேஞ்சு மற்றும் பச்சை பிரிவுகளால் (முறையே) இலங்கை கொடியில் குறிப்பிடப்படுகிறார்கள்.

அவர்கள் அடையாளமாக பௌத்தத்தின் தங்க எல்லை அடைப்புக்குள் உட்படுத்தப்பட்டுள்ளனர். வேறு எந்த இனத்தாரோ அல்லது மதங்களோ கண்ணில் தென்படாத விதத்தில் சிங்கள சிங்கம் தனித்து நிற்க, தமிழ் மற்றும் முஸ்லிம்களை குறிக்கும் நிறங்களை ஒட்டுமொத்தமாக விட்டுவிட்டு, தீவிர தேசியவாத சின்ஹலே (‘சிங்க இரத்தம்’) அமைப்பின் உருவப்படத்தில் இந்த குறியீடானது மிகவும் அதிகளவில் காணப்படுகிறது.

சின்ஹலே ஒரு நவீன இயக்கம் என்றாலும், கடந்த நூறு வருடங்களில் சிங்களவரல்லாத அடையாளங்களை ‘வெளியாட்களாக’ அதிகரித்தளவில் புறக்கணிப்புபதற்கான சூழலுக்கான அடிப்படை உணர்வை வழங்குகிறது. உதாரணமாக, 1915 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தகங்களை புறக்கணித்தது, இது நாடளாவிய ரீதியில் கலவரமாக வெடித்தது.

தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட வடக்கு மற்றும் கிழக்கை கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பதற்காக புலிகளுக்கு எதிராக நடத்தப்பட்ட குருதி தோய்ந்த உள்நாட்டுப் போர் (1983-2009),பிரிவினைவாதக் குழுவின் தோற்றம் ஆகியவற்றை விளக்கவும் இது உதவுகிறது.

இந்தப் போரில் வெற்றியாளர்கள் இல்லை. பவுத்த விகாரைகள், கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் முஸ்லிம் மசூதிகள் உட்பட இராணுவ மற்றும் பொதுமக்கள் இலக்குகளுக்கு விடுதலைப் புலிகள் தற்கொலை குண்டுதாரிகளை அனுப்பினர். புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில், குறிப்பாக 2009 இல் நடந்த இறுதித் தாக்குதலின் போது, அரசு இராணுவம் கண்மூடித்தனமாக தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த தாக்குதலில் செலுத்தப்பட்ட மனித விலை இன்னும் முழுமையாக அறியப் படவில்லை. பல பொதுமக்கள் உட்பட ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த முரண்பாட்டின் மத்தியில் தமிழ் பேசும்,இலங்கை முஸ்லிம்கள் திரும்ப திரும்ப சிக்கிக் கொண்டனர்.

1990 களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள வடக்கில் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். மேலும் புலிகள் பள்ளிவாசல்களில் வழிபாட்டாளர்களை கொன்றதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.

சம்சுதீன் நியூசிலாந்தில் அகதி அந்தஸ்துக்காக விண்ணப்பித்தபோது, அவர் விவரிக்கும் பின்னணி இதுதான்:

புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பில்வளர்ந்ததாகவும், படுகொலை முயற்சிகள், கடத்தல் மற்றும் சித்திரவதைகள் இடம்பெற்றிருந்ததாகவும் . குறிப்பிடத்தக்க வகையில்,. இந்த நிகழ்வுகளில் சில புலிகளின் வீழ்ச்சிக்குப் பிறகும் நடப்பதாகவும் சம்சுதீன் விவரித்திருந்தார். அந்த நேரத்தில் நியூசிலாந்து குடிவரவு மற்றும் பாதுகாப்பு நீதிமன்றம் அதனை நம்பத்தகுந்ததாக இருந்ததென கண்டுகொண்டிருந்தது.

இது எந்த வகையிலும் சாத்தியமற்றது. உள்நாட்டுப் போர் முடிவடைந்த பிறகு, புதிய எதிரியைத் தேடும் பௌத்த தேசியவாதிகளிடையே முஸ்லிம் எதிர்ப்பு உணர்வுகள் வியத்தகு முறையில் அதிகரித்துள்ளன.

குறிப்பாக ஒரு முக்கிய அமைப்பான பொதுப் பலசேனா அளுத்கம (2014), கண்டி (2018) மற்றும் நாடு முழுவதும் (2019, உயிர்த்த ஞாயிறை தொடர்ந்து பல முஸ்லி ம் எதிர்ப்பு கலவரங்களை தூண்டியதாக்க குற்றம் .சாட்டப்படுகிறது.

பொதுபல சேனாவை பொறுத்த வரை இலங்கை சிங்களபௌத்தத்திற்கான ‘இடமாக’ உள்ளது, மற்றும் அவர்களின் நீண்ட வரலாறு இருந்த போதிலும் முஸ்லிம்கள் அதிகளவில் விரும்பத்தகாத விருந்தினர்களாக உள்ளனர்.

அதே தசாப்தத்தில் முஸ்லிம்கள் மீதான விரோதம் மிகவும் குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்துள்ளது என்பது தற்செயலானது அல்ல, இலங்கைய தீவில் இஸ்லாமியவாத தீவிரமயமாக்கலின் சோகமான விளைவுகளும் அதிகரித்தன. வஹாபிஸ்ட் பிரச்சாரம் இஸ்லாமிய அரசு (ஐஎஸ்) மற்றும் அல்ஹைதா ஆகிய இருவற்றுடனும் இணைக்கப்பட்ட பழமைவாத சுன்னி சித்தாந்தம் குறைந்தது 1980களில் இருந்து இலங்கை முஸ்லீலிம் சமூகங்களை குறிவைத்துள்ளது.

ஆனால் சமீபத்தில் தான் அது கனிந்துள்ளது. ஜமாத் அட்தவாத் அல் வான்யா ( ‘தேசிய ஏகத்துவ அமைப்பு’) என்றழைக்கப்படும் ஒரு குழு 2013 இல் சூஃபி முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையை ஆதரிக்கத் தொடங்கியது (வஹாபிகளால் மதவெறியர்களாகக் கருதப்பட்டது) 2016 ஆம் ஆண்டு ஐஎஸ் அமைப்புக்காகப் போராட இலங்கை முஸ்லிம்கள் பலர் பயணம் செய்தனர். ஜமாத் அட்தவாத் அல்வான்யா இப்போது ஐ.எஸ்ஸுடன் பகிரங்கமாக இணைந்துள்ளது, 2019 இல் உயிர்த்த ஞாயிறு குண்டுவெடிப்புக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.

அதிகரித்த இஸ்லாமிய வெறுப்பு ணர்வுசூழலால் அடிப்படைவாதம் தெளிவானமுறையில் துரிதமாக அதிகரிப்பதாக இலங்கை முஸ்லிம் கவுன்சில் மீண்டும் மீண்டும் அரசாங்கத்தை எச்சரித்தது , இந்த வன்முறைச் செயற்பாடுகள் முஸ்லிம்எதிர்ப்பு உணர்வின் சுவாலைகளை தூண்டுகின்றன. இந்த சுழற்சி தீவின் கரைகளுக்குள் மட்டும் மட்டுப்பட்டிருக்கவில்லை. இலங்கையில் இருந்து உலகின் மறுபக்கத்தில் சம்சுதீனின் பயங்கரமான செயல்கள்,வேறுபடுத்தி பிரிக்க முடியாத உலகளாவிய பிரச்சனையை எமக்குக்காண்பித்துள்ளது.

பொதுபலசேனா இந்தியா மற்றும் மியான்மார் ஆகிய இருநாடுகளிலும் உள்ள முஸ்லி ம் எதிர்ப்பு இயக்கங்களுடன் வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது, இஸ்லாமிய அச்சுறுத்தல் குறித்த பகிரப்பட்ட கதைகள் ‘முறையாக முஸ்லிம் அல்லாத’ நாடுகளை ஆக்கிரமித்துள்ளன.

ஆனால் முக்கியமாக, பயங்கரவாதத்தின் உலகளாவிய வலையமைப்புகளுடன் இலங்கை முஸ்லிம்களை இணைக்கும் மேற்குலகின் ‘பயங்கரவாதத்திற்கு எதிரான போர்’ யோசனைகளையும் அவர்கள் பெரிதும் பிணைத்துக்கொள்கின்றனர்

ஒக்லாந்து தாக்குதலை தங்கள் கதைக்குசான்றாகக் கூறி, பொதுபலசேனா ஏற்கனவே ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இலங்கையில் முஸ்லி ம் அமைப்புகள் மீது அதிகரித்த அழுத்தங்களைக் கோருகிறது.

இத்தகைய வலியுறுத்தல்கள் அவற்றின் எளிமையை தூண்டுகின்றன. ஆனால் இஸ்லாமிய வெறுப்புணர்வு மற்றும் அடிப்படைவாதமயமாக்கல் சுழற்சியை மேலும் நிலை நிறுத்தகூடாதென்பதை நாம் விரும்பாவிடில் நாம் அவர்களைஉள்ளீர்க்க முடியாது.

இலங்கையில் இஸ்லாத்தின் நீண்ட வரலாறு வெறுமனே வேறுபாடுகள் தொடர்பான எச்சரிக்கையான சகிப்புணர்வுக்கு மேலானது என்பதற்கு சாத்தியமான சான்றாக இருந்துவருகிறது

புருனோ ஷெர்லி
தெற்காசியாவில், குறிப்பாக இலங்கையில் சமகால மற்றும் வரலாற்று ரீதியாக மதம், அரசியல், பாலினம் தொடர்பாக
புருனோ எம். ஷெர்லி பணியாற்றுகிறார்

9/9/21 தினக்குரல் பத்திரிகை

Check Also

ஆளை அடித்து வளர்த்தாட்டி இருக்கிறேன் – முஸ்அப் மரணத்தில் நடந்தவை

“தலையில் தொப்பி போடாது, நின்று கொண்டு ‘சூ’ பெய்திருக்கிறான் ஆளை அடித்து வளர்த்தாட்டியிருக்கிறேன்” சாய்ந்தமருது சபீலிர் ரசாத் மத்ரசாவில் மாணவர் …

Free Visitor Counters Flag Counter