டிக்டொக் செயலியின் அமெரிக்க உரிமையை வாங்கும் முயற்சியில் மைக்ரோசாப்டை தொடர்ந்து, டுவிட்டர் நிறுவனமும் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
வீடியோ பகிர்வு தளமான டிக்டொக் செயலி சமீபத்திய வாரங்களில் கடுமையான விவாதத்தின் மையமாகவும், கையகப்படுத்தும் பேச்சிலும் உள்ளது.
கடந்த வாரம் அமெரிக்க டொனால்ட் டிரம்ப், பாதுகாப்பு காரணங்களுக்காக 45 நாட்களுக்குள் டிக்டொக் நிறுவனத்துடன் வர்த்தகம் செய்வதை நிறுத்துமாறு நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார்.
செப்டெம்பர் 15 ஆம் திகதிக்குள் டிக்டொக்கின் அமெரிக்க உரிமத்தை அமெரிக்க நிறுவனத்திடம் விற்றுவிட வேண்டும் அல்லது தங்கள் நாட்டு செயலிக்கு தடை விதிக்கப்படும் என காலக்கெடு விதித்தார்.
இதனையடுத்து டிக்டொக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட் நிறுவனம் , அதன் தாய் நிறுவனமான பைட்டான்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியது.
இந்நிலையில், டிக்டொக்கின் அமெரிக்க உரிமத்தை வாங்கும் முயற்சியில் டுவிட்டர் நிறுவனமும் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த பேச்சுவார்த்தை ஆரம்ப கட்ட நிலையில் உள்ளது. இருப்பினும், டிக்டொக்கை வாங்கும் முயற்சியில் மைக்ரோசொப்ட் நிறுவனம் தான் முன்னிலையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்க டிக்டொக், டுவிட்டர் மற்றும் பைட்டான்ஸ் மறுத்துவிட்டது.
Akurana Today All Tamil News in One Place