டிக்டொக்கை வாங்கும் ஒரக்கள்; மைக்ரோசொப்டுக்கு தோல்வி

டிக்டொக் செயலியின் அமெரிக்க செயல்பாட்டை வாங்க ஒரக்கள் ( oracle ) நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரபல சீன செயலியான டிக்டொக் செப்டெம்பர் 15 முதல் நாட்டில் தடை செய்யப்படும் என்று  கூறியிருந்தார். 

இந்நிலையில், நாளை செப்டம்பர் 15 காலக்கெடுவுக்கு ஒரு நாள் முன்னதாக, இன்று டிக்டொக் செயலியின் தாய் நிறுவனமான பைடெடான்ஸ் அமெரிக்காவில் அதன் தொழில்நுட்ப கூட்டாளராக  ஒரக்கள் நிறுவனத்தை தேர்வு செய்துள்ளது. 

மைக்ரோசொப்ட் மற்றும் ஒரக்கள் ஆகிய நிறுவனங்கள் பைட்டான்ஸ் நிறுவனத்திடமிருந்து டிக்டொக்கின் அமெரிக்க உரிமையை வாங்குவதற்கான போட்டியில் மும்முரமாக இருந்தன

இந்தப் போட்டியில் ஒரக்கள் நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது.

அமெரிக்காவில் டிக்டொக்கின் “நம்பகமான தொழில்நுட்ப கூட்டாளர் ஒரக்கள்” என்று  அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleகொவிட்-19 வைரஸ் சீன ஆய்வகத்தில் மனிதனால் உருவாக்கப்பட்டது – அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார் சீன வைராலஜிஸ்ட்
Next articleநடுத்தர வருமானம் பெறுவோர் சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்பு