மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரமான மாண்டலே அருகே இராணுவ விமானம் விபத்துக்குள்ளானதில் 12பேர் உயிரிழந்துள்ளதாக நகர தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
இந்த விமானம் தலைநகர் நெய்பிடாவிலிருந்து பைன் ஓ எல்வின் நகரத்திற்கு பறந்து கொண்டிருந்த போது எஃகு ஆலையில் இருந்து சுமார் 300 மீற்றர் (984 அடி) தூரத்தில் விபத்துக்குள்ளானது.
இந்த விமானம் ஆறு இராணுவ வீரர்களையும், துறவிகளையும் ஒரு புதிய மடாலயத்திற்கு அடித்தளம் அமைக்கும் விழாவிற்காக அழைத்துச் சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.எனினும், இந்த விபத்தின் போது விமானி மற்றும் ஒரு பயணி தப்பிப்பிழைத்து ஒரு இராணுவ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும் தரையில் இருந்த மக்களுக்கு உயிர் சேதம் ஏற்பட்டதாக எந்த அறிக்கையும் இல்லை. விபத்துக்கு என்ன காரணம் என்று உடனடியாகத் தெரியவில்லை.
மியன்மாரில் நீண்ட காலமாக மோசமான விமான விபத்து பதிவாகியுள்ளது. – Thinakaran-
Akurana Today All Tamil News in One Place