கனடா ஒன்றாரியோ லன்டன் நகரில் வாகனத்தினால் மோதி முஸ்லிம்களை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது பற்றி மேலும் அறிய வருவதாவது.
ஞாயிற்றுக்கிழமை இரவு 8.40 மணியளவில் இலங்கை நேரப்படி திங்கள் கிழமை காலை 6.10 அளவில் பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த, ஒரு முஸ்லிம் குடும்பத்தின் மீது 20 வயதேயான ஒரு பயங்கரவாதி வேண்டுமென்றே தனது பிக்கப் ரக வாகனத்தினால் மோதி நால்வரை கொலை செய்துள்ளான், அத்துடன் 9 வயது பிள்ளை அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்காக போராடுவதக செய்திகள் தெரிவிக்கின்றன.
செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்ததாகவும் இஸ்லாமோபோபியாவிற்கு கனடாவில் இடம் இல்லை. முஸ்லிம்களுடன் தாம் நிற்பதாகவும் கனடிய பிரதமர் தெரிவித்துள்ளார்.




Akurana Today All Tamil News in One Place