பிரித்தானிய அரசாங்கம் தனது, புகலிட விதிகளில் பாரிய மாற்றத்தை மேற்கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளது.
பிரிட்டனின் உள்துறை அமைச்சர் ப்ரீத்தி பட்டேல், இது தொடர்பான நேற்றுமுன்தினம் கூறுகையில், புதிய குடிவரவுத் திட்டமானது, அகதியின் உண்மையான தேவைகளின் அடிப்படையிலான இருக்கும். மாறாக மனிதக் கடத்தல்காரர்களுக்கு பணம் செலுத்தக்கூடிய ஆற்றல்களின் அடிப்படையிலானதாக இருக்காது எனத் தெரிவித்துள்ளார்,
புகலிடக் கோரிக்கையாளர்களை அடையாளம் காண்பதில் இத்திட்டம் கவனம் செலுத்தும் என அவர் கூறினார். சட்டவிரோதமாக நாட்டுக்குள் நுழைவதை ஒத்திவைப்பதையும் நாடு கடத்தல்களை இலகுவாக்குவதையும் இது இலக்காகக் கொண்டுள்ளது.
அரசியல் புகலிட முறைமையை எவ்வாறு முழுமையாக சீரமைப்பது என்பதை நாம் ஆராய்கிறோம் என அமைச்சர் ப்ரீத்தி பட்டேல் கூறியுள்ளார்.
Akurana Today All Tamil News in One Place