
கொழும்பில் பெண்களை மட்டும் இலக்கு வைத்து கொள்ளையில் ஈடுபடும் கும்பல் ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
பெண்கள் மட்டும் பணியும் வர்த்தக நிலையங்களுக்கு வாடிக்கையாளர்கள் போன்று நுழையும் கும்பல், பெண்களின் வாய் மற்றும் கைகளில் செலோடேப் ஒட்டிய பின்னர், அவர்கள் அணிந்திருக்கும் நகைகள் மற்றும் பணத்தை திருடிச் செல்கிறது.
இவ்வாறு கொள்ளையடித்த 20 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள், பொருட்கள் மற்றும் பெண்களை அச்சுத்துவதற்காக பயன்படுத்தப்பட்ட விளையாட்டுத் துப்பாக்கிகளையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கடந்த மாதத்தில் மட்டும் மொரட்டுவ, கஹதுடுவ, நவகமுல, கோட்டை மற்றும் மஹரகம பொலிஸ் பிரிவில் விசேடமாக பெண்கள் மாத்திரம் உள்ள வர்த்தக நிலையங்களில் இந்த கொள்ளை கும்பல் பொருட்களை கொள்ளையடித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செலோடேப் கும்பல் என இந்த கும்பல் அழைக்கப்படுகின்றது. இந்த கும்பல் முச்சக்கர வண்டியொன்றில் பயணித்த வேளையில் மேல் மாகாண பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையை அடத்து கஸ்கிஸ்ஸ பகுதியிலும் மேலும் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பல்வேறு வகையில் ஏமாற்றி கொள்ளையில் ஈடுபடுவதால் வர்த்தக நிலையங்களில் பணியும் பெண்கள் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
Akurana Today All Tamil News in One Place