கடந்த 24 மணி நேரத்தில் சர்வதேச ரீதியில் 259,848 புதிய கோவிட் -19 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொரோனா தொடர்பான அறிக்கையின்படி 13.8 மில்லியன் பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக இதன்போது கூறப்பட்டது.
அதேநேரம் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 7,360 ஆக காணப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
வெள்ளிக்கிழமை சர்வதேச ரீதியில் மொத்தமாக 237,743 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்திருந்தது.
எனினும் அமெரிக்காவின் ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் படி தற்போது சர்வதேச ரீதியில் மொத்தமாக 14,288,689 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 602,138 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Akurana Today All Tamil News in One Place