உலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை, 37 இலட்சத்தையும், பலி எண்ணிக்கை, 2.5 இலட்சத்தையும் தாண்டியுள்ளது.
இந்நிலையில், கொரோனா காரணமாக ஐரோப்பிய நாடுகளில் அதிக பலி எண்ணிக்கை இத்தாலியில் பதிவாகியது. எனினும் நேற்றைய தினம் இத்தாலியின் பலி எண்ணிக்கையை பிரித்தானியா மிஞ்சியுள்ளது.
பிரித்தானியாவில் நேற்றையதினம் 693 உயிரிழப்புகள் பதிவானதையடுத்து மொத்த உயிர்பலி 29ஆயிரத்து 427 ஆக உயர்ந்துள்ளது.
இதேவேளை பிரித்தானியாவில் இதுவரை 1இலட்சத்து 94 ஆயிரத்து 990 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகியும் ஒரு இலட்சத்து 65 ஆயிரத்து 219 பேர் சிகிச்சை பெற்றும் வருகின்றனர்.
அத்துடன் ஸ்பெயின் 2 இலச்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் ஸ்பெயின் மற்றும் பிரான்சில், தலா, 25 ஆயிரத்துக்கு அதிகமானோர் பலியாகி உள்ளனர்.
Akurana Today All Tamil News in One Place
