மத்திய கிழக்கின் இதயப் பகுதியான பலஸ்தீன மக்களின் தாயக பூமியில் இஸ்ரேல் என்ற நச்சு விதையை நட்டு வளர்த்தது போல் அமெரிக்கா தலைமையிலான மேற்குலக சக்திகள், குர்திஷ் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள சிரியாவின் வட, கிழக்குப் பிராந்தியத்தில் இன்னொரு இஸ்ரேலை உருவாக்க முயந்சிக்கின்றனவா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
மேற்குலக ஆதரவுடன் செயற்படும் சூர்திஷ் இனப் படைகள் தனது நாட்டின் வடகிழக்கில் இனவொழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் சிறுவர்களைப் படைகளில் இணைத்து வருவதாகவும், இந்தப் பிராந்தியம் புதிய அரபு எதிர்ப்பு பிராந்தியமாக உருவாகி வருவதாகவும் சிரியா ஏற்கனவே குற்றச்சாட்டுக்களை முன் வைத்துள்ளது. இது கிட்டத்தட்ட 1940களில் இஸ்ரேல் உருவாகும் போது காணப்பட்ட நிலையிலேயே உள்ளதாகவும் சிரியா சுட்டிக்காட்டி உள்ளது.
இம்மாதம் இரண்டாம் திகதி கனடாவின் சுதந்திர பத்திரிகையாளரும் செயற்பாட்டாளருமான ஈவா பார்ட்லட் எழுதி உள்ள கட்டுரையில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய கிழக்கின் மோதல் பகுதிகளில் குறிப்பாக சிரியா மற்றும் பலஸ்தீனம் ஆகியவற்றில் சுமார் எட்டு வருடங்களை செலவிட்டுள்ள அவர் தான் திரட்டிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டே கட்டுரையை வரைந்துள்ளார்.
அதன்படி, சிரியாவில் உள்ள குர்திஷ் படைகள் மேற்கு நாடுகள் பலவற்றால் பாராட்டப்பட்டு வருகின்றன. ஒரு சுயாட்சிப் பிரதேசத்துக்காகப் போராடும் சுதந்திரப் போராளிகளாக குர்திஷ் படைகளை மேற்குலகம் சித்தரித்து வருகின்றது. ஆனால் சிரியாவில் உள்ள ஊடகங்களையும் சுதந்திர ஆய்வாளர்களையும் நாம் அவதானிக்காது விட்டால் அமெரிக்கா தலைமையிலான நேச அணிகளினால் போஷிக்கப்பட்டு வரும் இந்தப் பிரிவு கடந்த பல வருடங்களாக மனித குலத்துக்கு எதிராக இந்தப் பிராந்தியத்தில் புரிந்து வரும் குற்றங்கள் தொடரும் ஆபத்தே உள்ளது.
சிரியாவில் இன ரீதியாக வாழுமொரு பெரிய குழுவே குர்திஷ் இனத்தவர்கள். சிரியச் சனத்தொகையில் இவர்களின் எண்ணிக்கை சுமார் பத்து சதவீதமாகும். ஆனால் சிரியாவின் அண்டை நாடுகளான துருக்கி, ஈரான், ஈராக் ஆகிய நாடு களோடு ஒப்பிடுகையில் இந்தத் தொகை மிகவும் குறைவானது. துருக்கி சனத்தொகையில் இவர்களின் எண்ணிக்கை 14.4 முதல் 16 மில்லியன்களாகும். ஈரானில் 7.9 மில்லியன்களாகவும் ஈராக்கில் 4.7 முதல் 6.2 மில்லியனாகவும் உள்ளது.
மெசப்பத்தேமிய மலைத் தொடர்களை அண்டிய சுதேச இனக்குழுவே குர்திஷ் மக்கள். தற்காலத்தில் இது தென்கிழக்கு துருக்கி, வடகிழக்கு சிரியா, ஈராக்கின் வடக்கு, ஈரானின் மேற்கு, ஆர்மேனியாவின் தென்மேற்கு ஆகிய பிராந்தியங்களை உள்ளடக்கியதாகவுள்ளது.
துருக்கி, சிரியா, ஈரான், ஈராக், ஆர்மேனியா ஆகிய நாடுகளின் மலைப்பாங்கான எல்லைப் பகுதிகளில் சுமார் 35 மில்லியன் குர்திஷ் இனத்தவர்கள் வசித்து வருகின்றனர். மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் இவர்கள் நான்காவது பெரிய இனக்குழுவாகவும் உள்ளனர். ஆனால் இதுவரை இவர்களுக்கென தனியான தேச அந்தஸ்த்து கிடையாது.
இவர்கள் சுன்னத் ஜமாஅத் பிரிவை சேர்ந்த முஸ்லிம்கள். தனியான மொழி மற்றும் கலாசார அம்சங்களைக் கொண்டவர்கள். உலகம் முழுவதும் மாபெரும் வீரராகப் போற்றப்படும் ஜெரூஸலத்தை வென்ற மாவீரர் சலாஹாத்தீன் அய்யூபியும் கூரதிஷ் இனத்தைச் சோந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
துருக்கிப் பேரரசு காலப்பகுதியில் (1516 முதல் 1922 வரை) பெரிய அளவிலான கூதிஷ் பழங்குடி குழுக்கள் துருக்கியின் அனடோலியா பகுதியில் இருந்து சிரியாவின் வட பகுதிக்கு நாடு கடத்தப்பட்டனர்.
முதலாவது உலக யுத்த முடிவில் துருக்கிப் பேரரசை வீழ்த்திய பின் பிரிட்டனும் பிரான்ஸும் மத்திய கிழக்குப் பிராந்தியத்தை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்து 1916இல் செய்து கொள்ளப்பட்ட ‘ஸைகைஸ் பிகொட்’ உடன் படிக்கை மூலம் அந்தப் பிராந்தியத்தை துண்டு துண்டுகளாக்கின.
1920இல் செய்து கொள்ளப்பட்ட ‘வெச்ரஸ்’ உடன்படிக்கை சுயாட்சி அதிகாரமுள்ள குர்திஷ் பிராந்தியத்துக்கான யோசனையை முன் வைத்தது. துருக்கியின் புதிய தலைவராக உருவான முஸ்தபாகமால் அதாதுர்க் இதனை நிராகரித்தார். பின்னர் 1923இல் அந்த உடன்படிக்கை துருக்கியின் புதிய அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உருவாக்கப்பட்ட. ‘லூஸேன்’ என்ற உடன்படிக்கை மூலம் வலுவிழக்கச் செய்யப்பட்டது.
குர்திஷ் மக்களின் இவ்வாறான நீண்ட வரலாறுகளையும் மீறி அவர்களுக்கு இது வரை ஒரு நிரந்தரமான தேச எல்லைகள் வகுக்கப்படவே இல்லை. 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பக் கட்டத்தில் பல குர்திஷ் இனத்தவர்கள் ‘குர்திஷ்தான்’ என்று பொதுவாக அறியப்படும் விதத்தில் தமக்கென ஒரு தனித்தாயகத்தை உருவாக்க முற்பட்டனர். ஆனால் அது சாத்தியமாகி இருக்கவில்லை. உதாரணத்துக்கு ஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹுசேன் குர்திஷ் மக்களை பாரிய அளவில் படுகொலை புரிந்தும், அவர்களின் ஆயிரக்கணக்கான கிராமங்களை அழித்தும், அவர்களுக்கு எதிராக இரசாயன ஆயு தங்களைப் பிரயோகித்தும் இன ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
சுமார் 180000 ஈராக்கிய குர்திஷ் மக்கள் கொல்லப்பட்டதாக துகவல்கள் உள்ளன. மேலும் ஆயிரக்கணக்கானவர்கள் இடம்பெயாந்தனார். இதன் தொடராக ஹலாப்ஜா நகரில் மேற்கொள்ளப்பட்ட சரின் மற்றும் மஸ்டார்ட் இரசாயன வாயு தாக்கத்தில் மட்டும் ௬மார் ஐந்து இலட்சம் குர்திஷ் மக்கள் கொல்லப்பட்டனர்.
அமெரிக்கா ஈராக்கை கைப்பற்றிய பின் 2017இல் குர்திஷ் வாக்காளர்களுக்கு சுதந்திரத்தை ஏகமனதாகத் தெரிவு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்த நிலைமைகள் பற்றி பத்தி எழுத்தாளர் லத்தீப் மஃரூப் குறிப்பிடுகையில் “1940களில் பாரிய அளவிலான குர்திஷ் மக்கள் துருக்கியில் இருந்து சிரியா நோக்கி வந்த வண்ணம் இருந்தனர். இதன் இரண்டாவது அலை 1960 களிலும் தொடர்ந்தது. குர்திஷ் மக்களுக்காகப் போராடிய பி.கே.கே. அமைப்பு துருக்கி அரசுக்கு எதிராக மேற்கொண்ட தாக்குதல்களின் விளைவாக இது தொடர்ந்தது.
இவர்களுள் பலருக்கு சிரியா அரசு குடியுரிமைகளை வழங்கியது. அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி மலைப்பாங்கான பகுதிகளில் துருக்கிப் படைகளை எதிர்த்துப் தமது சுதந்திரத்துக்காகப் போராட ஆதரவும் வழங்கப்பட்டது. 1990 களின் முற்பகுதி வரை துருக்கிப் போராட்டக் குழுக்களின் எல்லா தலைமைகளும் சிரியா அரசின் ஆதரவோடு அங்கு நிலை கொண்டிருந்தன” எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், “பழங்குடி மக்கள் மீதான இனச் சுத்திகரிப்பு பலவந்தமான வெளியேற்றம் என்பன மிகவும் பயங்கரமானவை. எனவே ரோஜாவா என்றழைக்கப்படும் பேரரசால் செயல்படுத்தப்படும் ஒரு இனரீதியான தேசிய வாத குடியேற்ற காலனித்துவ அரசு ஒன்று எங்களிடம் உள்ளது. மேலும் இது 194கேளில் இஸ்ரேல் விற்கப்பட்டது போலவே விற்கப்படுகின்றது. காட்டு மிராண்டித் தனமான அரேபியர்களின் கடலில் மதச்சார்பற்ற மற்றும் சோஷலிய அரசின் கற்பனாவாதத்தை நாங்கள் உரு வாக்குகின்றோம் என்பதை உள்வாங்கி பிரசாரம் செய்வது போல் இது உள்ளது” என்று லத்தீப் மஃரூப் குறிப்பிட்டுள்ளார்.
சிரியா தான் இந்தக் குற்றங்களைப் புரிகின்றது என்று மிகவும் சத்தமிட்டு உலக ஊடகங்கள் உறுதியாகக் கூறினாலும் கூட, இவை மேற்குலகின் கைப்பொம்மைகளினாலேயே குர்திஷ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் அந்தந்த முனைகளில் செய்யப்படுகின்றன என்பதே யதார்த்தமாகும்.
Akurana Today All Tamil News in One Place