நாளாந்தம் இரவு நேரத்தில் ஸ்மார்ட் தொலைபேசி மற்றும் லேப்டாப்களை பாவிப்பதால் ஆண்களின் உயிரணுக்கள் தரம் குறைந்து விடுவதாக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
இன்றைய திகதியில் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் இளைய தலைமுறையினர் இந்த கொரோனா தொற்று பரவல் காரணமாக அலுவலகங்களுக்கு செல்லாமல், வீட்டிற்குள் இருந்தே பணியாற்றுகிறார்கள்.
இதன் காரணமாக இவர்கள் இரவு நேரத்தில் டிஜிற்றல் ஒளி உமிழும் ஊடக சாதனங்களான ஸ்மார்ட் தொலைபேசி மற்றும் லேப்டொப் போன்றவற்றை அதிக நேரம் பாவிப்பதால், அவர்களின் உடலில் சுரக்கும் உயிரணுக்கள், தரமற்றதாகவும், வீரியம் குறைவானதாகவும், நீந்தும் தன்மையில் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவும் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்திருக்கிறார்கள்.
அத்துடன் இதன் காரணமாக வீரியமிக்க உயிரணுக்களின் உற்பத்தியில் சமச்சீரின்மை ஏற்பட்டு, குழந்தையின்மை பாதிப்புக்கும் ஆளாகிறார்கள் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள். அதனால் இரவு நேரத்தில் ஸ்மார்ட் தொலைபேசி மற்றும் லேப் டொப் ஆகியவற்றின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளவேண்டும் என்றும், உறக்கமின்மையால் பாதிக்கப்படாமல் இருக்க, உறக்கத்தின் இயல்பான சுழற்சியை பராமரிக்க வேண்டும் என்றும், மருத்துவர்கள் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
டொக்டர் ராஜ்மோகன். தொகுப்பு அனுஷா.
Akurana Today All Tamil News in One Place