கொவிட்- 19 தொற்று காரணமாக அமெரிக்காவில் கடந்த 24 மணித்தியாலங்களில் ஆயிரத்து 252 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன் அங்கு கொவிட்-19 தொற்றுக்கு உள்ளான 28 ஆயிரத்து 212 புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் அமெரிக்காவில் இதுவரையில் 10 ஆயிரத்து 859 பேர் பலியாகியுள்ளதோடு 3 லட்சத்து 64 ஆயிரத்து 885 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை ஸ்பெயினில் கடந்த 24 மணித்தியாலங்களில் 700 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
அத்துடன் 5 ஆயிரத்து 29 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனடிப்படையில் ஸ்பெயினில்; இதுவரையில் 13 ஆயிரத்து 341 பேர் பலியாகியுள்ளதோடு 1 லட்சத்து 36 ஆயிரத்து 675 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் பிரான்ஸில் கொவிட்-19 தொற்று காரணமாக கடந்த 24 மணித்தியாலங்களில் 833 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு 5 ஆயிரத்து 171 பேர் கொவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனடிப்படையில் பிரான்ஸில்;; இதுவரையில் 8 ஆயிரத்து 911 பேர் பலியாகியுள்ளதோடு 98 ஆயிரத்து 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் கொவிட்-19 தொற்று காரணமாக நேற்றைய தினமே அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை இத்தாலியில் கடந்த 24 மணித்தியாலங்களில் 636 உயிரிப்புக்கள் பதிவானதை அடுத்து அங்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 16 ஆயிரத்து 523 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் இத்தாலியில் இதுவரையில் ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 547 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலங்களில் 439 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன் கொவிட்-19 தொற்றுறுதியான 3 ஆயிரத்து 802 பேர் பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதனடிப்படையில் பிரித்தானியாவில் இதுவரையில் 5 ஆயிரத்து 373 பேர் பலியாகியுள்ளதோடு 51 ஆயிரத்து 608 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை பிரித்தானியா பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மருத்துவ குழவினரின் ஆலோசனையின் அடிப்படையில் அவர் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டதாக அவரது பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
கொவிட் -19 தொற்றுக்கான நோய் அறிகுறி காரணமாக பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்
இந்தநிலையில் நேற்று மாலை அவரது நிலைமை மோசமானதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன் சிறப்பு கண்கானிப்பின் கீழ் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை கொவிட்-19 தொற்று காரணமாக சர்வதேச ரீதியில் 74 ஆயிரத்து 644 பேர் பலியாகியுள்ளனர்.
அத்துடன் 13 லட்சத்து 45 ஆயிரத்து 653 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
எவ்வாறாயினும் 2 லட்சத்து 78 ஆயிரத்து 413 பேர் இதுவரையில் குணமடைந்துள்ளனர்.
Akurana Today All Tamil News in One Place