கடந்த சில தினங்களாக நாட்டில் பெய்து வரும் அடைமழையின் காரணமாக நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தினாலும் மண் சரிவினாலும் பாதிக்கபட்டுள்ளன.
இவ்வாறான இக்கட்டான சந்தர்ப்பத்தில் பாதிக்கபட்ட மக்களுக்கு எம்மால் முடியுமான உதவிகளை செய்து அல்லாஹ்வின் அன்பையும் அருளையும் பாதுகாப்பினையும் பெற்றுக்கொள்ள முன்வருமாறு அக்குறணை ஜம்இய்யதுல் உலமா, அக்குறணை மஸ்ஜித்கள் சம்மேளனம், அக்குறணை வர்த்தக சங்கம், அஸ்னா மத்திய பள்ளிவாசல், பைத்துல் மால், பைத்துஸ் ஸகாத் மற்றும் ஆகிய பொது நிறுவனங்கள் சார்பாக தாங்களை வினயமாக வேண்டிக் கொள்கிறோம்.
பொதுவாக அனர்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் குறிப்பாக நாவலபிட்டிய பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவி செய்யும் முகமாக உங்களிடமிருந்து நிதி கோரப்படூகின்றது. அத்துடன்..
புதிய உடுப்புகள், அரிசி, பருப்பு, சீனி, மீன்டின், சிறுவர்களுக்கான பால்மா, பிஸ்கட் போன்ற பொருட்களும் மேலதிகமாக எதிர்பார்க்கப்படுகின்றன.
குறிப்பு : உங்களது நிதி உதவிகளை அஸ்னா மத்திய பள்ளிவாசலில் செலுத்தி அதற்கான பற்றுச்சீட்டுகளை பெற்றுக் கொள்ளுமாறும் மேலதிக விபரங்களுக்கு : 0777467171, 0773293032, 0777807070, 0775375904 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறு அன்பாக கேட்டக்கொள்கிறோம்.
ஜஸாக்குமுல்லாஹு கைரன்
இணைச் செயலாளர், அக்குறணை ஜம்இய்யதுல் உலமா
Akurana Today All Tamil News in One Place
