
இம்முறை நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் அக்குறணை அஸ்ஹர் மாதிரி ஆரம்பப் பாடசாலை மாணவன் ஜாபிர் முஹம்மத் சரப் 190 புள்ளிகளைப் பெற்று மத்திய மாகாணத்தில் தமிழ் மொழி மூலத்தில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் அக்குறணையைச் சேர்ந்த E.J. ஜாபிர்- ஆசிரியை M.I.R. சானாஸ் (ஆசிரியர் அக்குறணை முஸ்லிம் மகளிர் தேசிய பாடசாலை) ஆகியோரின் புதல்வர் ஆவார்.
அத்துடன் இப்பாடசாலை மாணவர்கள் 18 பேர் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்து வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர்.
இம்மாணவர்களின் சிறந்த அடைவுக்காக அயராது உழைத்த இப்பாடசாலை அதிபர் S.A.F. ஜிம்னாஸ், ஆசிரியர்களான M.S.N. ஹிமாயா, A.C.M.. சியாம், M.M.F. ரினாஸ், A.H.F. சர்ஜானா மற்றும் உதவி ஆசிரியர்களுக்கும் பாடசாலை சமூகம் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
Akurana Today All Tamil News in One Place
