விஷேட வைத்திய நிபுணர்(MD) மேற்படிப்பிற்காக Dr. ரஸா ரிழ்வான் தெரிவு
அக்குரனையைச் சேர்ந்த Dr. ரஸா பொது மருத்துவ (General Medicine) விஷேட வைத்திய நிபுணர் துறைக்கான மேற்படிப்பை மேற்கொள்வதற்கான முதற்கட்ட பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
இம்முறை இலங்கை Postgraduate Institute of Medicine (PGIM),University of Colombo நடாத்திய போட்டிப்பரீட்சையில் தோற்றி சித்திபெற்றுள்ள இவர், அஸ்ஹர் கல்லூரி முன்னாள் ஓய்வு பெற்ற அதிபர் ரிழ்வான் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியை மசீனா ஆகியோரின் மகனாவார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை பூர்த்திசெய்துள்ள இவர் தற்போது நுவரெலியா போதனா வைத்தியசாலையில் வைத்தியராக கடமை புரிந்து வருகின்றார்.
நாட்டினதும், சமூகத்தினதும் தலைசிறந்த வைத்தியராக உருவாக எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.
வாழ்த்துக்கள்🎉🎉🎉
Hilmy Habeeb
Akurana Today All Tamil News in One Place