Loading Akurana Today
Friday, 16 October 2026 Need help? View emergency numbers
Environment

சட்டவிரோத மின் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

சட்டவிரோத மின் சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது

இலங்கை கடற்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து கொழும்பு கோட்டை சுங்கத் திணைக்களத் தலைமையகத்திற்கு முன்னால் உள்ள பகுதியில் நேற்று வியாழக்கிழமை (15)  மேற்கொண்ட விசேட கூட்டு சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்த வெளிநாட்டு மின்னணு சிகரெட்டுகளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படைக் கப்பலான ரங்கல நிறுவனத்தினரும், மிரிஹான மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து மேற்கொண்ட விசேட கூட்டு சோதனை நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார்.

இதன்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய முயற்சித்த 30 மின்னணு சிகரெட்டுகளுடன் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கூட்டு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர் யட்டியந்தோட்டை பிரதேசத்தைச் சேர்ந்த  37 வயதுடையவர்  ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் கைப்பற்றப்பட்ட மின்னணு சிகரெட்டுகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வெலிக்கடை பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Found this useful?Share it with someone in the community.
Paid placements

Local promotions

Offers and updates from local businesses.

Continue reading

More in Environment

Neighbourhood Clean-Up Brings Volunteers Together
Environment

Neighbourhood Clean-Up Brings Volunteers Together

17 Sep, 5:15 pm
Tree-Planting Drive Focuses on Native Shade Trees
Environment

Tree-Planting Drive Focuses on Native Shade Trees

15 Sep, 3:45 pm
Climate Change: Urgent Action Needed
Environment

Climate Change: Urgent Action Needed

19 Feb, 1:30 pm
The Akurana Today app

Everything local, wherever you go.

Stay connected with Akurana Today for breaking news, community updates, Marketplace listings, the Business Directory and emergency contacts—all in one app.

Two Akurana Today mobile app screens showing local news and community services