இன்று அதிகாலை நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலங்களில் இந்தியாவில் புதிய கொரோனா தொற்றாளர்கள் 40,000 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய இந்தியாவில் கொரோனா தொற்றுறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 11 இலட்சத்து 54 ஆயிரத்தை கடந்துள்ளது.

அத்துடன் கடந்த 24 மணித்தியாலங்களில் 681 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நூற்றுக்கு 62.61 வீதமானோர் முழுமையாக குணமடைந்து வெளியேறியுள்ளனர் எனவும் இந்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.