வதந்தியால் வந்த வினை : பங்களாதேஷில் இரு பெண்கள் உட்பட 8 பேர் அடித்துக் கொலை

பங்களாதேஷில் பாலம் கட்டுவதற்காக குழந்தைகள் நரபலி கொடுக்கப்படுவதாக வதந்தியால் குழந்தைகளை கடத்துபவர்கள் என சந்தேகித்து இரண்டு பெண்கள் உட்பட எட்டுப்பேர் அடித்துக் கொல்லப்பட்டுளள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பங்களாதேஷில்  பத்மா ஆற்றின் குறுக்கே மிகப் பெரிய பாலம் கட்டபட்டு வருகிறது. 20 ஆயிரத்து 180 அடி நீளம் கொண்ட இந்த பாலம் கட்டி முடிக்கப்பட்ட பின் பங்களாதேஷில்  மிகப் பெரிய பாலம் இதுவாகத்தான் இருக்கும்.

இந்நிலையில் ‘பாலத்தை சிறப்பாக கட்டி முடிக்க அதற்கு நரபலி கொடுக்க வேண்டும். அதனால் குழந்தைகள் கடத்தப்பட்டு நரபலி கொடுக்கப்படுகின்றனர் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. 

மேலும் குழந்தையின் தலையுடன் வாலிபர் ஒருவர் செல்லும் படமும் வெளியானது. இதனால் மக்கள் பீதியடைந்தனர். சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நடந்து கொள்பவர்களை குழந்தை கடத்தல்காரர்கள் என கருதி அவர்களை கூட்டமாக அடித்து தாக்கும் சம்பவங்கள் அதிகரித்தன. இந்த தாக்குதலுக்கு இதுவரை இரண்டு பெண்கள் உட்பட எட்டு பேர் பலியாகியுள்ளனர். ஆனால் இவர்கள் யாருமே குழந்தை கடத்தல்காரர்கள் இல்லை என தெரிய வந்துள்ளது.

இது பற்றி பங்களாதேஷ் பொலிஸார் தெரிவிக்கையில்,

பாலத்துக்காக குழந்தைகள் நரபலி கொடுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் சிலர் கிளப்பிய வீண் புரளிதான் இந்த பிரச்சினைக்கு காரணம்.

சமூக வலைத்தளங்களில் புரளி கிளப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

எட்டு பேர் அடித்துக் கொல்லப்பட்டது மட்டுமின்றி கும்பல் தாக்குதலில் 30 பேர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பாக சிலரை கைதுசெய்து விசாரித்து வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.

Check Also

இஸ்ரேலில் நான்காவது டோஸ் தடுப்பூசி செலுத்த பரிசீலனை!

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்காக இஸ்ரேல் அரசு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிகளை செலுத்த முடிவு செய்துள்ளது. உலகளவில் கொரோனா …

You cannot copy content of this page