அறிவுறுத்தல்களை மீறும்‌ பள்ளி நிர்வாகிகள்‌ பதவி நீக்கப்படுவர்‌ – வக்பு சபை

கொவிட்‌ 19 வைரஸ்‌ தொற்றிலிருந்தும்‌ பாதுகாப்புப்‌ பெற்றுக்‌கொள்வதற்காக சுகாதார அமைச்சு வழங்கியுள்ள அறிவுறுத்தல்களை பள்‌ளிவாசல்கள்‌ கண்டிப்பாக தொடர்ந்தும்‌ பின்பற்ற வேண்டுமெனவும்‌ அவ்வாறு பின்பற்றப்படாத பள்ளிவாசல்களின்‌ நம்பிக்கைப்‌ பொறுப்பாளர்கள்‌ பதவி நீக்கப்படுவார்கள்‌ எனவும்‌ வக்பு சபையின்‌ தலைவர்‌ சப்ரி ஹலீம்தீன்‌ தெரிவித்தார்‌.

நாட்டின்‌ பல பகுதிகளில்‌ அநேகமான பள்ளிவாசல்களில்‌ கொவிட்‌ 19 வைரஸ்‌ தொற்று தொடர்பான சுகாதார அமைச்சின்‌ வழிகாட்டல்கள்‌ பின்பற்றப்படுவதில்லை என முறைப்பாடுகள்‌ கிடைக்கப்பெற்றுள்ளதெனவும்‌ அவர்‌ குறிப்பிட்டார்‌.

அவர்‌ தொடர்ந்தும்‌ விடிவெள்‌ளிக்கு கருத்துத்‌ தெரிவிக்கையில்‌, பள்ளிவாசல்களில்‌ ஜமாஅத்‌ தொமுகைகளின்போது ஒரு மீற்றர்‌ சமூக இடைவெளி பேணப்பட வேண்டும்‌. அத்தோடு ஒவ்வொரு வரும்‌ மாஸ்க்‌ அணிந்து கொள்ள வேண்டும்‌. பள்ளிவாசலில்‌ காபட்‌ இடப்பட்டிருந்தால்‌ அங்கு தரைவிரிப்பு (முசல்லா) பயன்படுத்தியே தொழுகையில்‌ ஈடுபட வேண்டும்‌. பள்ளிவாசல்களில்‌ வுழூ செய்வதற்கான ஹவழ்‌ முடப்பட்டிருக்கவேண்டும்‌. தொழுகையாளிகள்‌ ஹவ்ழ்‌ பயன்படுத்தக்கூடாது. காபட்‌ இடப்படாது தரையிலேயே தொழவேண்டும்‌.

ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும்‌ சுகாதார அமைச்சு ஏற்கனவே வழங்கியுள்ள கொவிட்‌ 19 வைரஸ்‌ தொற்றிலிருந்தும்‌ பாதுகாப்புப்‌ பெறுவதற்கான அறிவுறுத்தல்கள்‌ கடைப்பிடிக்கப்படுகின்றனவா? என்பது பள்ளிவாசல்‌ நம்பிக்கைப்‌ பொறுப்பாளர்கள்‌ உறுதி செய்து கொள்ள வேண்டும்‌.

பள்ளிவாசல்களில்‌ சுகாதார அமைச்சின்‌ வழிகாட்டல்கள்‌ பின்பற்றப்படுகின்றனவா? என்பதை திணைக்களத்தின்‌ ஊழியர்கள்‌ கண்காணிப்பார்கள்‌ என்றார்‌. இவ்விவகாரம்‌ தொடர்பில்‌ வக்பு சபை கடந்த செவ்வாய்க்கிழமை கூடி ஆராய்ந்து தீர்மானம்‌ நிறைவேற்றியது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page