யுக்ரைனிலிருந்து இலங்கைக்கு உல்லாசப் பயணிகளாக வருகை தந்தவர்களில் மூவருக்கு கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

சுற்றுலாப் பயணிகளுக்காக விமான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னர் 180 சுற்றுலாப் பயணிகளுடன் இலங்கைக்கான முதல் யுக்ரைன் பயணிகள் விமானம் கடந்த திங்கட்கிழமை மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.