பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கு ஆங்கிலம், தொழிநுட்ப பாடத்தை கற்பிக்க நடவடிக்கை

பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களுக்கு டிசம்பரில் இணையவழியூடாக ஆங்கிலம் மற்றும் தொழிநுட்ப பாடத்தை கற்பிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்தார்.

நேற்று செவ்வாய்கிழமை அரசாங்க தகவல் திணைக்களத்திலிருந்து இணையவழியூடாக இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில் ,

பல்கலைக்கழகங்களுக்கு இணைய வழியூடாக புதிதாக மாணவர்களை இணைத்துக் கொள்ளும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இணையவழியூடாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு வெற்றிகரமாக கற்பித்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. அதன் காரணமாக கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பரீட்சைகளையும் நடத்தக்கூடியதாகவிருந்தது.

இதேவேளை தற்போது பல்கலைக்கழகத்திற்கு புதிய மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான செயற்பாடுகளும் இணைய வழியூடாகவே முன்னெடுக்கப்படுகின்றன. அதன்படி 41,500 பேர் பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படவுள்ளனர்.

சுதந்திரத்துக்குப் பின்னர் அதிகளவான மாணவர்கள் இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page