கொரோனா பாதித்த பெண்ணுடைய, கணவரின் துயர்மிகு வாக்குமூலம்

சமூக ஊடகங்கள் தனது குடும்பத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டன என மினுவாங்கொடை ஆடைத்தொழிற்சாலையின் முதலாவதாக அடையாளம் காணப்பட்ட நோயாளியின் கணவர்தெரிவித்துள்ளார்.

டெய்லி மிரரிற்கு வழங்கியுள்ள பேட்டியில் எம்.ஏ.ஏ அமரசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளது .

நாங்கள் திவுலுப்பிட்டியவில் ஹொரஸ்முல்லையில் உள்ள பொமுகம்மன என்ற இடத்தில் வசிக்கின்றோம்.நான் இங்கு பிறந்தவன்.

எனது மனைவி பிரன்டிக்ஸ் தொழிற்சாலையில் பணிபுரிகின்றார்.

கொரோனாவைரசினால் எனது மனைவி பாதிக்கப்பட்டுள்ளார் என்பது கண்டறியப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்னரே அவர் காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார்.

இதன் காரணமாக நாங்கள் அவரால் வேலைக்கு வரமுடியாது என்பதை தெரிவித்திருந்தோம்.எனினும் தொழிற்சாலை நிர்வாகம் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் நிறுவனத்துக்குள்ளேயே கிசிச்சையை பெறுமாறு தொழிலாளர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

தொழிற்சாலைக்குள் நுழையும் போது ஒருவருக்கு காய்ச்சல் உள்ளதா என சோதனையிடவேண்டும்,ஆனால் கடும்காய்ச்சல்உள்ளவர்கள் எவ்வாறு தொழிற்சாலைக்குள் நுழைவதற்கு அனுமதிக்கப்பட்டனர். தொழிற்சாலையில் தொழிலாளர்களை சோதனையிடும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என நாங்கள் கருதுகின்றோம்.

செப்டம்பர் 28 ம் திகதி எனது மனைவி கிசிச்சைக்காக தொழிற்சாலைக்குள் உள்ள மருத்துவநிலையத்திற்கு சென்றார்,அவருக்கு விடுப்பினை மறுத்த நிர்வாகம் அவருக்கு சிகிச்சை வழங்கியுள்ளது.

இதன்பின்னர்அவரது உடல்நிலை மோசமடைந்துள்ளது, சுவாசிக்க முடியாமல் திணறியுள்ளார்,தொழிற்சாலையை சேர்ந்த சிலர் அவரை கம்பஹா மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதை அறிந்ததும் நாங்கள் அவரை பார்க்க சென்றோம்.

மூன்று நாட்களின் பின்னர் அவரை மருத்துவமனையிலிருந்து வீடுசெல்ல அனுமதிப்பதாக மருத்துவமனை வைத்தியர்கள் தெரிவித்தனர்.அதேபோன்று எனது மனைவி வீட்டிற்கு செல்வதற்கு அனுமதித்த அவர்கள் பிசிஆர் சோதனை முடிவுகள் இன்னமும் வரவில்லை எனவும் எனது மனைவி உடல்நிலை தேறிவிட்டார் எனவும் தெரிவித்தனர்

இதன் பின்னர் எங்கள் பகுதியின் சுகாதார பரிசோதகர் எங்களை தொலைபேசிமூலம் தொடர்புகொண்டு எனது மனைவி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

எனது மனைவியை தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதித்தனர்.எங்களைகாலி தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு கொண்டு சென்று பிசிஆர் சோதனைகளை மேற்கொண்டனர்.இதன்பின்னர் எனது மகளும் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது,அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன் பின்னர் எனது மனைவிகுடும்பம் குறித்து சமூக ஊடகங்களில் பல பொய்யான தகவல்கள் பரவுவதை நான் அறிந்தேன்.

தொழிற்சாலை அதிகாரிகளை பாதுகாப்பதற்காக தொழிற்சாலையின் சில ஊழியர்கள் சமூக ஊடகங்களில் போலியான தகவல்களை பரப்புகின்றனர் என்பதை அறிந்தோம்.

கொவிட் நோயாளியாக முதலில் கண்டுபிடிக்கப்பட்டவர் எனது மனைவி என்பதாலேயே இந்த நிலைமைஉருவானது.

சில நாட்கள் தாமதமாக கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் நிலைமை பாரதூரமானதாக மாறியிருக்கும்.

எனது மனைவியின் உடல்நிலை பலவீனமானதாக காணப்பட்டதால் அவர் நோய் அறிகுறிகளை வெளிப்படுத்தியது நல்ல விடயமாக மாறிவிட்டது.

தற்போது நானும் எனது பிள்ளைகளும் விசமருந்தி தற்கொலை செய்துவிடலாம் என எண்ணும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்,நாங்கள் மீண்டும் எங்கள்பகுதிக்கு திரும்பிச்செல்லும் போது அந்த வாடகை வீட்டில் வசிப்பதற்கு அனுமதிப்பார்களா என்பது தெரியவில்லை.எதிர்காலத்தில் இவ்வாறான நடவடிக்கை இடம்பெறாதிருப்பதை அரசாங்கம் உறுதிசெய்யவேண்டும்

எங்களால் சமூகத்தை எதிர்கொள்ளமுடியவில்லை,நாங்கள் தான் நோயை உருவாக்கினோம் என சமூகம் கருதுகின்றது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page