பொதுமக்களுக்கு குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!

ஊடக அறிவித்தல் குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்

கோவிட் – 19 வைரஸ் தொற்று நோய் பரவுவதைத் தடுக்கும் நடவடிக்கையாக, 2020 நவெம்பர் மாதம் 02 ஆம் திகதி தொடக்கம் மறு அறிவித்தல் வரை, குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்திற்கு பொது மக்கள் வருகை தருவது தற்காலிகமாக இடைநிறுத்தப்படுகின்றது என்பதை இத்தால் அறியத் தருகின்றேன்.

குடிவரவு, குடியகல்வுத் திணைக்களத்தின் பத்தரமுல்லை பிரதான அலுவலகத்தின் மூலம் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ள அத்தியவசிய சேவைகளுக்காக அலுவலக வேலை நாட்களில் மு.ப. 8.00 மணி தொடக்கம் பி.ப. 4.30 மணி வரை கீழ்க் காணும் தொலைபேசி இலக்கங்கள் அல்லது மின்னஞ்சல் ஊடாக உரிய பிரிவை தொடர்பு கொண்டு தேவையான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு பொது மக்களை தொடர்ந்தும் கேட்டுக் கொள்கின்றேன்.

கடவுச்சீட்டுப் பிரிவு – 070-7101060, 070-7101070

குடியுரிமைப் பிரிவு – 070-7101030

வெளிநாட்டுத் தூதரகப் பிரிவு – 011-5329233, 011-5329235

வீசா பிரிவு – 070-7101050
devisa@immigration.gov.lk
acvisa1@immigration.gov.lk
acvisa2@immigration.gov.lk
acvisa@immigration.gov.lk

துறைமுகங்கள் பிரிவு – 077-7782505

பொதுவான ஆலோசனைகளும், மேலதிக தகவல்களும் www.immigration.gov.lk

அதே போன்று, கண்டி, வவுனியா, மாத்தறை மற்றும் குருணாகல் பிராந்திய அலுவலகங்கள் அத்தியவசிய தேவைகளுக்காக கடவுச்சீட்டுகளைப் பெற்றுக் கொள்வதற்காக திறந்திருக்கும். அதற்கமைய, நாட்டில் அமுலிலுள்ள சுகாதார ஒழுங்குவிதிகளுக்குக் கட்டுப்பட்டு, 070-7101060, 070-7101070 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்பு கொண்டு, திகதியொன்றையும், நேரமொன்றையும் ஒதுக்கிக் கொண்டு, மேற்சொன்ன பிராந்திய அலுவலகமொன்றிற்கு செல்லுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

முக்கியமானது:

1. தற்சமயம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலிலுள்ள பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்கள் இவ் வேளையில் மேற்சொன்ன பிராந்திய அலுவலகங்களுக்கு வருகை தருவதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு அறியத் தருகின்றேன்.

2. மேற்சொன்ன எல்லா சேவைகளையும் வழங்கும் போது, தற்போதுள்ள தொற்று நோய் நிலவரங்களின் அடிப்படையில், அவ்வப்போது அரசாங்கத்தினால் எடுக்கப்படுகின்ற கொள்கைத் தீர்மானங்கள், ஊரடங்குச் சட்டம் அமுலாக்கல், சுகாதாரத் துறை, பாதுகாப்புப் பிரிவு தீர்மானங்களுக்குக் கட்டுப்பட்டே சேவைகள் வழங்கப்படும் என்பதையும், அதற்கமைய சேவைகளைப் பெற்றுக் கொடுத்தல் தொடர்பான தீர்மானங்களை அவ்வப்போது திருத்தங்களுக்கு உட்படுத்த இடமுண்டு என்பதையும் தயவுடன் அறியத் தருகின்றேன்.

கட்டுப்பாட்டாளர் நாயகம்
குடிவரவு, குடியகல்வுத் திணைக்களம்

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page