அதிகரிக்கும் இணைய மோசடி – போலீசார் எச்சரிக்கை!

நாட்டில் இணையதளம் அல்லது சமூக வலைத்தளங்கள் மூலம் இடம்பெறும் மோசடிகள் அதிகரித்துள்ளன.  

இந்த வருடத்தில் மாத்திரம் குற்றப்புலனாய்வு பிரிவினரால் இணையதள மோசடி தொடர்பில் 71 விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

பொது மக்கள் இது தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என்று பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பினைப் பெற்றுத்தருவதாகக் கூறி இடம்பெற்ற மோசடி தொடர்பில் 14 முறைப்பாடுகளும் , மோட்டார் சைக்கள் அல்லது லொத்தர் சீட்டிலுப்பு மூலம் பரிசு கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவித்து மக்களை ஏமாற்றியமை தொடர்பில் 28 முறைப்பாடுகளும் கிடைக்கப் பெற்றுள்ளன. 

இவற்றில் மோட்டர் சைக்கிள் அல்லது வேறு ஏதேனும் பரிசு பொருள் கிடைத்துள்ளதாக கூறி இடம்பெற்ற 4 மோசடிகள் மற்றும் லொத்தர் பரிசு கிடைத்துள்ளதாக கூறி இடம்பெற்ற 20 மோசடிகள் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page