கத்தாரில் உள்ள இலங்கை தூதரகம் இரண்டு வாரங்களுக்கு மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தூதரக ஊழியர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தனிமைப்படுத்தல் நோக்கத்திற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

இதற்கமைய, நேற்று (22) முதல் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை தூதரகம் மூடப்பட்டுள்ளது.

இக் காலப்பகுதியில் அவசர சேவைகளுக்காக தொலைபேசி இலக்கங்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன அறிவிக்கப்பட்டுள்ளது.