நாட்டின் பல பிரதேசங்களில் அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளுடன் தொடர்புடையவர்களின் PCR பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அறிக்கையில் ராஜாங்கனை பாடசாலை மாணவர்கள் 90 பேரும் ஹபராதுவையைில் 25 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் PCR முடிவுகள் இன்று கிடைக்கவுள்ளன.

ராஜாங்கனையில் மாத்திரம் 300க்கும் அதிகமானோரை தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஹபராதுவ பிரதேசத்தில் நேற்று அடையாளம் காணப்பட்டவர் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தின் ஆலோசகராக செயற்பட்டவராகும்.

கடந்த முதலாம் திகதி அவர் விடுமுறை பெற்று காலி மற்றும் ஹபராதுவ பிரதேசத்தின் பல பகுதிகளில் பயணம் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

ஹபராதுவ பிரதேசத்தில் பலரை தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது