Video: ஒரு தேசியப் பட்டியல். மூன்று குழுக்களாக பிரிந்து முயற்சி.

தேசியப்பட்டியலுக்கான ஞானசார தேரருக்கும் ரத்தன தேரருக்கும் இடையில் இடம்பெரும் இழுபரியில் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கட்சியின் பொதுச் செயலாளர் காரியத்தில் இறங்கி உள்ளார்.

2001 இலும் இதே போன்று ஒரு சம்பவம் நடந்தது.

சிஹல உருமய முதன்முறையாக போட்டியிட்ட தேர்தல் அது. பெரிய எதிர்ப்பார்ப்புக்களுடன் கலத்தில் குதித்த்து. ஆனால் ஒரேயொரு தேசியப்பட்டியல் ஆசனம் மட்டுமே கிடைத்தது.

அதுவரை ஒற்றுமையாக இருந்த கட்சி பின்னர் தேசியப் பட்டியலுக்காக அடித்துக் கொண்டது.

கடைசியில் கட்சியின் பொதுச் செயலாளர் திலக் கருனாரத்ன தனது சொந்த முடிவில் தனது பெயரை பரிந்துரை செய்து பாராளுமன்ற உருப்பினரானார்.

கட்சியின் தலைவர் SL குனசேகர அழுது கொண்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்தது இன்றும் எனது கண்ணை விட்டு மறையவில்லை.

பின்னர் சிஹல உருமய கட்சி சுக்கு நூராக உடைந்து பாட்டலி மற்றும் கம்மன்பிலவின் முயற்சியில் ஹெல உருமய என்ற பெயரில் உயிர் பெற்றது.

இதே போன்ற சம்பவம் இப்பொழுது ஞானசார தேரர், ரத்ன தேரர் கூட்டணி யிலும் இடம்பெற்றுள்ளது.

பொதுத்தேர்தலில் பொதுஜனபெரமுனவில் சீட்டு மறுக்கப்பட்டதை தொடர்ந்து “எங்கள் மக்கள் சக்தி” எனும் பெயரில் #ஞானசார தேரோ மற்றும் #அதுரலிய ரத்ன தேரோ தலைமையிலான பிக்குகள் அணி ஒன்றாக களமிறங்கியது.

ஞானசார தேரோவின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது, இந்நிலையில் ஏனையோர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டனர், ஆயினும் ஒரு உறுப்பினரை கூட வென்றெடுக்க முடியாத நிலையில் அதிஷ்டவசமாக தேசியப்பட்டியல் ஒன்று கிடைத்தது!

அதனை யாருக்கு வழங்குவது எனும் போட்டியில் ஞானசார தேரோ தலைமையில் ஒரு குழுவும், அதற்கெதிராக அதுரலிய ரத்ன தேரோ தலைமையில் இன்னொரு குழுவும், இதற்கிடையே கட்சியின் செயலாளர் தலைமையில் இன்னொரு குழுவாக ஒவ்வொரு குழுவும் தங்களுக்கே தேசியப்பட்டியல் வழங்கப்பட

வேண்டுமென மூன்று குழுக்களாக பிரிந்து போராட்டத்தில் இறங்கியுள்ளன.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page