கண்டியில் 45 பாடசாலைகளை மூட தீர்மானம்

கண்டி நகர பகுதியில் உள்ள 45 பாடசாலைகளை எதிர்வரும் டிசம்பர் மாதம் 4 ஆம் திகதி வரை மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

கொரோனா பாதிக்கப்பட்ட நபர்கள் கண்டி நகர சபை எல்லைக்குள் கண்டு பிடித்ததன் பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.