கொவிட்-19 தொற்றுக்குள்ளான நிலையில் தப்பிச் சென்ற தாயும் மகனும் சிக்கினர்

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பியோடிய தாயும் மகனும் எஹலியகொட பகுதியில் வைத்து பிடிபட்டுள்ளனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்த எஹலியகொட பகுதியைச் சேர்ந்த இவர்கள் இருவரும் கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

நேற்றிரவு அங்கிருந்து இருவர்கள் தப்பிச் சென்றதையடுத்து அவர்களை தேடும் பணிகளில் அதிகாரிகள் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையிலேயே அவர்கள் எஹலியகொட, யாபா வீதியில் அமைந்துள்ள வீடொன்றிலிருந்து பிடிபட்டுள்ளனர்.