கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களின் உடலங்களை அடக்கம் செய்வது தொடர்பான பிரச்சினைக்கான ஒரு முடிவை அரசாங்கம் இன்று -11- பெரும்பாலும் அறிவிக்கும் என்று சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொரோனாவினால் இறந்த முஸ்லிம்களை அடக்கம் செய்ய அரசாங்கம் முடிவெடுத்துள்ளதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்,

சுகாதாரத் துறை அளிக்கும் பரிந்துரையின் பேரில், மட்டுமே செயற்பட அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டார்.

கொரோனா நோயால் இறக்கும் மக்களின் இறுதிச் சடங்குகள் இனம் அல்லது மதத்தை அடிப்படையாகக் கொண்டவை அல்ல.

எனவே சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட குழுவின் ஆலோசனையின் பேரில் மட்டுமே இந்த முடிவு எடுக்கும் என்று அவர் தெரிவித்தார்.

இந்தநிலையில் சுகாதார அதிகாரிகள் கொரோனா மரண உடலங்களை அடக்கம் செய்வதற்கான பரிந்துரையை வழங்கினால் அதனை அரசாங்கம் எதிர்க்காது என்றும் அமைச்சர் கூறினார்.