ஜனாசாக்களை தகனம் செய்வதற்கு எதிராக முன்னாள் அமைச்சரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா.

ஜனாசாக்களை தகனம் செய்வதற்கு எதிராக போராடிக் கொண்டு இருக்கும் முன்னாள் அமைச்சரும் ஐனாதிபதி சட்டத்தரணியுமான பைஸர் முஸ்தபா தான் சமூகத்திற்காக நீதிமன்றத்தில் தானே முன் வந்து மனுதாக்கல் செய்து தானே நீதிமன்றில் ஆஜர் ஆகியுள்ளார்.

கொரோனா தொற்று நோயினால் மரணிப்பவர்களின் ஐனாசாக்களை எரிப்பதற்கு எதிராக உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை 30-11-2020 எடுக்கப்பட்டு மாலை 5 மணி வரை வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்து இடம் பெற்றது.

காலை 10.30 மணிக்கு ஆரம்பித்த நீதிமன்றம், இதில் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணிகளான, முன்னாள் அமைச்சரும் பைஸர் முஸ்தபா, எம்.ஏ.சுமந்திரன், நிஸாம் காரியப்பன், ஆகியோர் மிகவும் ஆணித்தரமாக விஞ்ஞான ரீதியாக நீதிபதியின் கேள்விகளுக்கு விடயங்களை மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் விவாதித்தனர்.

இம் மனுக்களை ஆட்சேபித்து கொவிட்-19 தொற்று நோயினால் உயிரிழக்கும் அனைவரினதும் உடல்கள் எரிக்கப்பட்ட வேண்டும் எனக் கோரி அரச தரப்பு பிரதிநிதியான ஐனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஐயரத்ன ஆஐராகியிருந்தார்.

சுகாதார அமைச்சர் சார்பில் பிரதிநிதி சொலிசிட்டர் ஜெனரல் நெரில்புள்ளே ஆஜராகிறார். பி ப 4.30 வரை உச்ச நீதிமன்றம் இடம் பெற்றது.

குறிப்பிட்ட அடிப்படை உரிமை மீறல்மனுக்கள் மீதான விசாரணைகள் இன்று செவ்வாய்க்கிழமை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான விவாதம் மீண்டும் இன்று காலை 10.30 மணி முதல் இடம் பெற்றுக் கொண்டிருகின்றது.

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page