முகக்கவசங்களின் இறக்குமதி நிறுத்தம் – அதிகபட்ச விலை 15 ரூபா, KN95 முகக்கவசத்தின் விலை 100 ரூபா

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, நாட்டில் அதிகளவு கேள்விக்கு உள்ளாகியுள்ள முகக்கவசங்களை, இலங்கையில் தயாரிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இதன்பிரகாரம், இறக்குமதி செய்யப்படும் முகக்கவசங்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

நாடளாவிய ரீதியில், ஒரு நாளைக்கு 1.5 மில்லியன் முகக்கவசங்கள் பயன்பாட்டில் இருப்பதாகவும் இந்த முகக்கவசங்கள், சீனா உள்ளிட்ட மற்றைய பல நாடுகளில் இருந்து தினமும் இறக்குமதி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், எதிர்வரும் நாள்களில், KN95 முக்கவசங்களையும் இலங்கையில் தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் பிரகாரம், முகக்கவசம் ஒன்றின் அதிகபட்ச விலை 15 ரூபாயாகவும் KN95 முகக்கவசத்தின் அதிகபட்ச விலை 100 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படும் என்றும் தெரியவந்துள்ளது.