இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்திற்கான பயண பட்டியலில் புதிய உள்ளடக்கங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அதன்படி, இலங்கை, இஸ்ரேல் மற்றும்  உருகுவே  ஆகிய நாடுகள் நேற்று வியாழக்கிழமை முதல் இங்கிலாந்தின் பாதுகாப்பான பயணப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

குறித்த நாடுகளுடன் நமீபியா, ருவாண்டா, பொனெய்ர், சென் யூஸ்டேடியஸ் மற்றும் சபா, வடக்கு மரியானா தீவுகள் மற்றும் அமெரிக்க வேர்ஜின் தீவுகள் ஆகிய நாடுகளிலிருந்தும் பயணிகள் இங்கிலாந்துக்கு வருகை தரும் போது  14 நாட்களுக்கு தனிமைப்பட தேவையில்லை என பிரித்தானிய  போக்குவரத்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நடை முறை எதிர்வரும் சனிக்கிழமை முதல் அமுலாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த வாரம் எந்த நாடுகளும் பாதுகாப்பான பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என்று பிரித்தானிய  போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் டுவிட்டரில் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.