திகனையில் கேட்ட வித்தியாசமான சத்தம்

கண்டி- திகனையில் இன்று பிற்பகல் 1.05 மணியளவில் வித்தியாசமான சத்தம் கேட்டதாக அங்கிருப்போர் தெரிவித்தனர். 

திகனையில் அடிக்கொரு தடவை நிலநடுக்கம் ஏற்படுவதால், மீண்டுமொரு தடவை நிலம் நடுங்குவதற்கு முன்னர் சத்தம் கேட்டுள்ளதாக அச்சப்படுகின்றனர்.

எனினும், படைப்பிரிவின் பயிற்சி நடவடிக்கையும் அப்பிரதேசத்தில் தற்போது முன்னெடுக்கப்படுவதாக படைத்தரப்பு தகவல்கள் தெரிவித்தன.

அந்தப் பயிற்சியின் போது சில வெடிப்பொருட்கள் வெடிக்கப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், அவ்வாறான தகவல்களை உறுதிப்படுத்த முடியவில்லை.