மீண்டும் திறக்கப்படும் மோட்டார் வாகன திணைக்களம்!

கொரோனா தொற்று காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் மீண்டும் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

சுகாதார அமைச்சினால் நேற்று வெளியிடப்பட்டுள்ள புதிய கொரோனா தொற்று விதிமுறைக்கு அமைய குறித்த திணைக்களம் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல்  திறக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன் தொலைபேசி வாயிலாக முன்கூட்டியே பதிவு செய்யும் முறைக்கமைய ஒரு நாள் சேவையை ஆரம்பிக்கவுள்ளதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர்  இது தொடர்பில் மேலதிக தகவல்களை கீழே தரப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடப்பு கொண்டு பெற்றுகொள்ளுமாறு பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

01. வாகனப்பதிவுகளுக்கு 0706354116, 0706354117, 0706354118

02. வாகன உரிமங்களுக்காக 0706354115, 0706354137, 0706354138, 0706354139, 0706354140, 0706354141

03. வாகன இலக்க தகடு தொடர்பில் 0706354119, 0706354120 

04. ஏனைய விடயங்களுக்கு 0706354145, 0706354146, 0706354147,0706354148, 0706354149 –வீரகேசரி பத்திரிகை

Check Also

ஹங்வெல்லை துப்பாக்கிச் சூடு நடந்தது என்ன?

வாஹித் லெப்பை மொஹம்மது பர்சான் 46 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை. ஹங்வெல்லை நகரின் ஹோட்டல் ஒன்றினை நடாத்திச் செல்பவர். …

You cannot copy content of this page